Saturday, December 17, 2022

இஸ்லாமியா மகளிர் கலைக் கல்லூரியும் சென்னை நூலகச் சங்கம் (வேலூர் கிளை) இணைந்து ஒரு நாள் கருத்தரங்கம்


இன்று 17.12.2022 வாணியம்பாடி இஸ்லாமியா மகளிர் கலைக் கல்லூரியும் சென்னை நூலகச் சங்கம் (வேலூர் கிளை) இணைந்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இக் கருத்தரங்கில் கோவை, கிருஷ்ணா கல்லூரி நூலகர் முனைவர் ரஹ்மான் சிறப்புரையாற்ற, சென்னை நூலகச் சங்கத்தின் தலைவர் முனைவர் பேரா. க. நித்தியானந்தம், தலைமையுரை ஆற்றினார். செயலாளர் முனைவர் ஜனார்த்தனன், பொருளாளர் முனைவர் இரா. கோதண்டராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கிளையின் தலைவர் முனைவர் குமரேசன், இஸ்லாமிய ஆடவர் கல்லூரி நூலகர் முனைவர் அப்துல், இஸ்லாமிய மகளிர் கல்லூரி நூலகர் முனைவர் ஆரிபா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். கருத்தரங்கில் புதுவை கிளையின் ஆலோசகர் முனைவர் ராஜன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் திருமதி மும்தாஜ், நூலகர் செல்வமணி உள்ளிட்ட ஏராளமான நூலகர்கள் கலந்துக் கொண்டு கருத்தரங்கை சிறப்பித்தனர். சென்னை நூலகச் சங்கமும், இஸ்லாமிய மகளிர் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை நூலகச் சங்கத்தின் தலைவரும், கல்லூரி முதல்வரும் கையொப்பமிட்டனர்.